Search
Wednesday 26 July 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திருமதி.கணேசலிங்கம் மீனாம்பிகை – 1ம் ஆண்டு நினைவஞ்சலி

obituary-flower-frames

பிறப்பு : 02.12.1940              இறப்பு : 18.03.2016

அன்புள்ள எங்கள் அம்மாவே!!!
அன்பால் எம்மை காத்து நின்று
அறிவூட்டி எமை வளர்த்தாய்!

அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே
ஆண்டு ஒன்று முடிந்தாலும்
ஆறாமல் தவிக்கின்றோம்!

ஆறுதலை இனி யார் தருவார்
அம்மா என்றழைக்க நீ இல்லையம்மா
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!

அன்பான எங்கள் அம்மாவே
உங்கள் நினைவுகளில் எம்
கண்கள் உடைந்து கண்ணீர்
இன்னும் பெருகுதைமா !

கணேசலிங்கத்தின் மீனாம்பிகையே
எம் குலம் தழைக்க வந்த
திருநாம தீபமே நின்மதியாய்
உறங்கிடம்மா !!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கும்
கணவர், பிள்ளைகள்

கடந்த 18.03.2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்த எங்கள் குடும்பத்தலைவி அமரர் கணேசலிங்கம் மீனாம்பிகை அவர்களின் முதலாம் ஆண்டு துவசம் எதிர்வரும் 06.04.2017 வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப்  பிரார்த்தனையிலும், அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி : 141/5, மங்கையற்கரசி ஒழுங்கை, நல்லூர்.
தகவல் : கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *