Search
Wednesday 22 November 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திருமதி. மங்கயற்கரசி சண்முகராசா-31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும்

FR3 (1)

பிறப்பு :10.04.1941                        இறப்பு :14.03.2017

வளமான வாழ்வு தந்து
வாழ்விற்கு ஒளி தந்து
தேசம் புகழும் நிலை பெற்று
பாசத்துடன் எமை வளர்த்து
அழியாப் பிறப்பெடுக்கும் ஆவலுடன்
ஆன்மா தாங்கிய சரீரம் நீங்கி
ஆண்டவன் அடியில் அமரத்துவம் கொண்ட
எங்கள் அன்புத்தாயின் பாதம் பற்றி
உணர்வினால் பூஜித்து
உயிரினால் அலங்கரித்து
உதிரத்தால் தீபம் ஏற்றி
எம் கண்ணீரால் அர்ச்சனை செய்து
அம்மாவின் நினைவுகளைச் சுமந்துவரும்
தீபமலரை அன்னையின் பாதக்கமலங்களுக்கு
சமர்ப்பணம் செய்கின்றோம்
ஏற்றருள்வீர் எம்மினிய தாயே!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 11.04.2017 செவ்வாய்க்கிழமை அன்று காலை 6.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும்,வீட்டுக் கிருத்திய கிரியைகள் 13.04.2017 வியாழக்கிழமை அன்று பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிராத்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:

18/4 கட்டாப்பாளி,
ஆனைக்கோட்டை
மானிப்பாய்.

தகவல்
குடும்பத்தினர்
0094777373740


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *