தோற்றம் : 03.07.1936 மறைவு : 23.01.2019
பன்னாலையை பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சங்கரப்பிள்ளை இராசரத்தினம் அவர்கள் 23.01.2019 (செய்வாய்க்கிழமை) காலமானார். அன்னார் காலம்சென்ற பரமேஸ்வரியின் அன்புக்கு கணவரும், இராஜேஸ்வரனின் அன்புத் தந்தையும், திருவாதவூரர், அன்னசுந்தரவல்லிஅம்மாள் ஆகியோரின் அன்புச் சகோதரரும், பிரதாயிணியின் அன்பு மாமனாரும், வைஷ்ணவி , தஸ்வி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் 24.01.2019 (வியாழக்கிழமை) புகையிரத வீதி, கோண்டாவிலில் உள்ள இல்லத்தில் பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும். அன்னாரின் அன்பு மனைவி கடந்த 20. 01. 2019 அன்று காலமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: ராஜரட்ணம் ராஜேஸ்வரன்
தொலைபேசி: 0094715364921