தலைப்பு செய்திகள்

பேராசிரியர். கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி: 31 ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பும்

27786711_1561467173937065_1

தோற்றம் : 16 .12. 1967               மறைவு : 10.01.2018

எங்கள் அன்புத் தெய்வமே!
நொடிப் பொழுதில் எமை
வருந்தவிட்டு  சென்று விட்டீர்கள்!

ஆண்டவன் படைப்பினை
ஆழமாய்ப்  பார்த்தாலும்!
பாசமாய் உங்களின்
பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின்
புன்னகையை ரசிக்கின்றோம்!

நாட்கள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது
உங்கள் திருமுகம் எங்களை
விட்டு மறையுமா மறக்குமா…

காலத்தின் கோலம் எங்களிடம்
இருந்து பிரித்துவிட்டாலும்
எந்நாளும் எம் மனதில் காவியமாய்..
ஆகிவிட்டீர்கள் ….

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப்  பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின்  அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 08.02.2018 வியாழக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் கரைநகர் ஆலங்கன்று வைரவர் கோவிலடி அந்தியேட்டி மடத்திலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 09.02.2018 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது நீலிப்பந்தனை , காரைநகர் இல்லத்திலும் நடைபெறும்.  அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப  சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி

முகவரி:
நீலிப்பந்தனை,
காரைநகர்.

தகவல்
மனைவி மற்றும் குடும்பத்தினர்
(0776073151)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *