செய்திகள்

O/L பெறுபேறுகள் : கணனி மயப்படுத்தும் நடவடிக்கை பூர்த்தி

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை கணனிக்குள் உள்வாங்கும் நடவடிக்கைகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது கணனிக்குள் உள்வாங்கப்பட்டுள்ள பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்து வருவதுடன் அந்த நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகளை வெளியிட முடியுமென கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். -(3)