செய்திகள்

O/L பெறுபேறு எப்போது வெளியாகும் : கல்வி அமைச்சு பதில்

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை ஏப்ரல் 30ஆம் திகதிக்குள் வெளியிடுவதற்கு நடவடிக்கையெடுக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மார்ச் 28ஆம் திகதிக்குள் பெறுபேற்றை வெளியிடுவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த போது கொரோனா அச்சுறுத்தல் நிலைமைகளால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமையினால் அந்த நடவடிக்கைகள் தள்ளிப்போனமை குறிப்பிடத்தக்கது. -(3)