தமிழ்மக்களும் தேர்தலில் கூறப்பட்ட மாற்றமும்: பேராசிரியர் மணிவண்ணனுடனான நேர்காணல்
லண்டனில் கடந்த 31 ஆம் திகதி “இலங்கை: யானையை மறைத்தல் – இன அழிப்பு, போர்க்குற்றம் மற்றும் மனிதாபிமானத்துக்கெதிரான குற்றங்களை ஆவணப்படுத்துதல்” என்ற மிக முக்கியமான ஒரு நூல் வெளியிட்டுவைக்கப்பட்டது.
2000 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தினை சென்னை பல்கலைக் கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாக பீடத்தின் தலைவரான பேராசிரியர் ராமு மணிவண்ணன் எழுதியிருந்தார். இந்த புத்தக வெளியீட்டில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து வருகை தந்திருந்த பேராசிரியர் மணிவண்ணன், இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், இந்த ஆட்சி மாற்றம் தமிழ் மக்களுக்கு சாதகமானதா, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான ஐ. நா விசாரணை அறிக்கையை தாமதப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள், தனது ஆய்வுக்காக இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் செய்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் என்று பல்வேறு விடயங்கள் தொடர்பில் தனது கருத்துக்களை சமகளம் செய்திச் சேவையுடன் பகிர்ந்து கொண்டார்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=A0P_xtlqyfQ&feature=youtu.be” width=”500″ height=”300″]