Search
Thursday 23 May 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இன்று

ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இன்று

உலகம் முழுவதிலும் இன்றையநாளில் பெண்கள்குறித்த எண்ணங்களும், ஆய்வுகளும், கலந்துரையாடல்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

உடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். தோல்விகளை கண்டு துவண்டு விடாது அதனை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிக்கண்ட பல பெண்கள் நம் மத்தியில் வாழ்கின்றனர்.1

மலையகத் தோட்டப்புறங்களில் தேயிலை, இறப்பர் தோட்டங்களில் அதிகமான பெண்களே வேலை செய்கின்றனர். குடும்பம், பிள்ளைகளை பொருளாதார ரீதியாக கவனித்துக் கொள்வதற்கு அவர்கள் படும்பாட்டினை வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாது.காலங்காலமாக மனவுலக இருட்டுக்குள் முடங்கிக்கிடந்த பெண்ணினம் விழித்தெழவேண்டும். விழிப்புத்தான் அவர்களின் விடுதலைக்கு முதற்படி ‘ எனத் தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களும் முன்வைத்த கருத்துகளை மீண்டும் இன்றைய நாளிலும் நாங்கள் மனங்கொள்ள வேண்டியவர்களாகின்றோம்.ஆண், பெண் என்கின்ற பாலியல் வேறுபாட்டிற்கு அப்பால், பெண்களின் ஆளுமைகள் மதிக்கப்படவேண்டும்.

இவ்வாறு குடும்பத்தையும், தமது வாழ்வையும் அன்றாடம் பல வலிகளைச் சுமந்து கொண்டு நடத்திச் செல்லும் பெண்களுக்கு ஆதவன் தொலைக்காட்சி தலைவணங்கி நிற்கின்றது.இன்றைய நாளில் மேடைகளிலும், மாநாடுகளிலும் பெண்களின் பெருமை பேசுகின்றவர்கள் கடைநிலையில் அவதியுறும் இந்தப் பெண்கள் குறித்தும் கரிசனை செலுத்த வேண்டும் என்பதே யாவரினதும் எதிர்பார்ப்பாகும்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *