Search
Tuesday 17 September 2019
  • :
  • :

இனவெறி மற்றும் வன்முறைக்கு எதிராக சிங்கள சமூகம் எழுச்சிபெறுகின்றதா?

இனவெறி மற்றும் வன்முறைக்கு எதிராக சிங்கள சமூகம் எழுச்சிபெறுகின்றதா?

மாஸ் எல் யூசுவ்- கொழும்பு டெலிகிராவ்

இனவாதம் மற்றும் மததீவிரவாதம் குறித்து சாதாரண சிங்களமக்கள் மத்தியில் எப்போதும் ஓரு வித அச்ச உணர்வு காணப்பட்டு வந்துள்ளது. புத்தரின் போதனைகளிற்கு எதிராக அவை காணப்படுவதே இந்த மனோநிலைக்கு காரணம். இதன் காரணமாக இனவெறி என்பது குறிப்பிட்ட சிறு எண்ணிக்கையானவர்களை அடிப்படையாக கொண்டது என்ற கருதுகோள் எப்போதும் பொருத்தமானது.எனினும் இந்த சிறு எண்ணிக்கையானவர்கள் பேரழிவை ஏற்படுத்தக்கூடியவர்களாக காணப்படுகின்றனர்.
1983 கலவரம்  இதற்கு சிறந்த வரலாற்று உதாரணம்.
1983 யூலை 24 கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதோ அல்லது தன்னெழுச்சியானதோ இல்லை. கொல்லப்பட்ட படைவீரர்களின் குடும்பங்களை சேர்ந்த சிறிய எண்ணிக்கையானவர்களே அன்று கனத்தையில் கூடியிருந்தனர். அவர்கள் அரசாங்கம் இறுதிகிரியைகளை நடத்தும் பொறுப்பை குடும்பத்தவர்களிடம் வழங்காமல் தானே செய்தது குறித்து சீற்றம் கொண்டிருந்தனர். ஆபத்தான வதந்திகள் வேகமாக பரவத் தொடங்க அருகிலுள்ள வனாத்தவில்லு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கனத்தை நோக்கி வரத்தொடங்கினர். அங்கு கூடியிருந்தவர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர்  பின்னர் இந்த கோபம் -கவலை -வதந்திகள் அனைத்தும்கலந்த கலவை காரணமாக அவர்கள் பொரளை கனத்தை பகுதியில் உள்ள தமிழ் கடைகளை தாக்க தொடங்கினர்.
பின்னர் அது காட்டுத்தீ போல கட்டுப்படுத்த முடியாததாக பரவியது.அந்த கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 முதல் 3000 வரையிருக்கலாம் என வெவ்வேறு மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
ரம்ழான் மற்றும் அளுத்கம கலவரங்கள்
e9eac254-4e82-11e7-a842-aa003dd7e62a_1280x720_165633
முஸ்லீம்களின் வழிபாட்டு இடங்கள் மற்றும் வணிகநிலையங்கள் மீது கடந்த இரண்டு மாதங்களில் அதிகரித்துள்ள தாக்குதல்கள் அச்சமூட்டக்கூடியவை. 28 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் காவல்துறையினரிடம் பல முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் கவலையளிக்கும் விதத்தில் சட்ட ஓழுங்கிற்கு பொறுப்பான அமைச்சரும் சட்டம் ஓழுங்கை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளும் மோசமான கோமாவில் உள்ளனர்.
இந்த  சம்பவங்கள் பாதுகாப்பற்ற முஸ்லீம் சமூகத்தை பெருமளவிற்கு குழப்பமடையச்செய்தன. அரசியலின் அனைத்து மட்டங்களிலும் உள்ளவர்களிடமும் முஸ்லீம் மக்கள் தங்கள் கவலைகளை வெளியிட்டனர் சட்டம் ஓழுங்கு அமைச்சரிடம் பிரதமரிடம் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்தனர்.
எனினும் இந்த சந்திப்புகளில் முஸ்லீம்கள் விடுத்த ஓரேயொரு வேண்டுகோளான சட்டத்தின் ஆட்சியை அமுல்படுத்துங்கள் என்பதை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு இல்லாதது சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயமாகும்.
ஸ்தாபன ரீதியிலும் உரிய நடைமுறையை பின்பற்றுவதிலும் காணப்படும் தோல்வி பேராபத்து உள்ளது என்பதற்கான அறிகுறியாகும். ஏதோ நடக்கப்போகின்றது என்பதற்கான தெளிவான அறிகுறிகளாக அவை காணப்பட்டன.
மனிதர்கள் திட்டமிட்டிந்த அழிவை  2017 மே மாதத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் மூலம் இயற்கை தவிர்த்துக்கொண்டதா  என்பது அனைவரினதும் மனதில் உள்ள கேள்வியாகும்.
சிங்கள சமூகம்
இந்த மாதத்தில் சிங்கள சமூகத்தின் குரல்களை கேட்க முடிந்தது.மதகுருமாரினதும் சாதாரண மக்களினதும் குரல்களை கேட்க முடிந்தது. புத்திஜீவிகளினதும் கலைகஞர்களினதும் குரல்களை கேட்க முடிந்தது.
அரசியல்வாதிகள் மத்தியில் ஜேவிபியினது குரல்களை கேட்க முடிந்ததையும் சட்டம் ஓழங்கின் வீழ்ச்சி குறித்து அவர்கள் தங்கள்கவலையை முன்வைத்ததையும் காணமுடிந்ததை சுட்டிக்காட்டவேண்டும். இந்த சம்பவங்கள் இந்த நாட்டில் இன்னமும் தங்களிற்கு நம்பிக்கையுள்ளது என்ற உத்தரவாதத்தை முஸ்லீம் சமூகத்திற்கு வழங்கியுள்ளன.
கௌரவமும் சரியான சிந்தனையும் கொண்ட பெரும்பான்மையான சிங்களவர்கள்  நாங்கள் அனுபவித்தது எல்லாம்போதும் இதற்கு மேலும் வேண்டாம் என தீர்மானித்து விட்டனர். ஓரு குறிப்பிட்ட எண்ணிக்கையான குற்றவாளிகளும் காடையர்களும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மற்றும் மதகுருமாரின் ஆசீர்வாதத்துடன் இந்த நாட்டை அழிவையும் மரணத்தையும் நோக்கி கொண்டு செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
மௌனமாகவுள்ள ஆனால் சமூகத்திற்கான தங்கள் கடமை என்னவென்பதை அறிந்த சிங்களவர்களின் எழுச்சிக்கான சமிக்ஞையிது.
புரவசி பலய என்ற அமைப்பு காலஞ்சென்ற மாதுளவாவே சோபித தேரரின் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்துடன் இணைந்து பொலிஸ்மா அதிபரை சந்தித்தது. ஏனைய சிவில் அமைப்புகளும் இதற்கு ஆதரவளித்திருந்தன. அவர்கள் முஸ்லீம் சமூகத்தினரிற்கு எதிரான வன்முறைகள் குறித்த தங்கள் ஆழ்ந்த கவலையை பொலிஸ் அதிகாரிகளிடம் வெளியிட்டிருந்ததுடன் ஞானசார தேரரின்  ஓளித்துப்பிடித்து விளையாட்டு குறித்தும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
Wijerama-muslim-shop-1200x1600
வீதிகளில் காணப்படும் கருத்துக்கள்
தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக தெரிவித்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாத பௌத்தமதகுரு  பின்னர் சரணடைவதற்காக மிகவும் இலகுவாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார்.
நன்கு திட்டமிடப்பட்ட நாடகம் அரங்கேறிக்கொண்டிருந்தவேளை வீதியில் நின்றிருந்த மக்கள் இந்த மதகுருவிற்கு உயிர்  ஆபத்து உள்ளது என்ற ஊதிப்பெருப்பிக்கப்பட்ட கதைகளிற்கு என்ன நடந்தது?இவரை கைதுசெய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட விசேட பொலிஸ் பிரிவுகளிற்கு என்ன நடந்தது என  கேள்வி எழுப்பியதை காண முடிந்தது.
இந்த மதகுருவை மறைத்து வைத்திருந்தவர் யார்?  நீதவான் கேள்வி எழுப்பியவேளை குறிப்பிட்ட மதகுருவின் குற்றங்களின் தாக்கத்தை காவல்துறையினர் ஏன் குறைத்து குறிப்பிட்டனர் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியதை காணமுடிந்தது.
இந்த நாடகம் குறித்து சமூக பொறுப்புள்ள மக்கள் ஆழ்ந்த ஏமாற்றமும் அவமானமும் அடைந்துள்ளனர்.இவர்கள் எங்களை முட்டாள்கள் என நினைக்கின்றார்களா? மதகுருவிற்கு என்று ஒரு சட்டமும் சாதாரண மக்களிற்கு என்று ஓரு சட்டமும் உள்ளதா என அவர்கள் கேட்கின்றனர்.
பலர் ஞானசார தேரரிற்கு வழங்கப்பட்ட அதிவேக பிணையை சாடுகின்றனர்.இது கின்னஸ் சாதனை என கேலி செய்கின்றனர்.
மக்கள் ஊழல் மிகுந்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை சாடுகின்றனர்- ராஜபக்சாக்கள் பொலிஸ் மற்றும் இந்த நாட்டின் நீதித்துறையை அவர்கள் சாடுகின்றனர்.
ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியான தலைமைத்துவத்தை வழங்கவில்லை என்பதை இது வெளிப்படுத்தி நிற்கின்றதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *