Search
Tuesday 18 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஏ-9 நெடுஞ்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகின வடமராட்சியில் சோக மயம்

ஏ-9 நெடுஞ்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகின வடமராட்சியில் சோக மயம்

ஏ-9 நெடுஞ்சாலையில் கொக்காவிலுக்கும் மாங்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த யாழ். இளைஞர்களின் பெயர் விபரங்கள் வெளியாகி உள்ளன.
இதற்கமைய, யாழ் வடமராச்சி அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த, 24 வயதான நவரத்தினம் அருண், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 36 வயதான சந்திரசேகரம் ஜெயசந்திரன், யாழ். மாலு சந்தி பகுதியை சேர்ந்த 19 வயதான சிவசுப்பிரமணியம் சிந்துஜன் மற்றும் யாழ். பருத்திதுறையை சேர்ந்த 19 வயதான சின்னத்துரை கிருஸ்ணரூபன் ஆகியோரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயதுடைய பி.துவாரகன் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன், விபத்தில் பலியானவர்களின் சடலம் பிரேதப் பரிசோதனையின் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதேவேளை, குறித்த ஹயஸ் ரக வாகன சாரதி மதுபோதையில் இருந்தாரா என்பது குறித்த விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *