Search
Thursday 14 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் – அருந்தவபாலன்

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டிய நிலைமை  ஏற்படலாம் – அருந்தவபாலன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட மிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைப் பரப்புச் செயலாளரான அருந்தவபாலன் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு 5 தமிழ் கட்சிகள் முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகளை எந்தவொரு வேட்பாளரும் ஏற்றுக்கொள்ளா விட்டால், ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டிய நிலைமை கூட ஏற்படலாம் அல்லது தமிழர் சார்பில் நிற்கும் ஒருவருக்கு ஆதரவளிப்பதாக இருக்கலாம், அல்லது தேர்தலில் வாக்களித்து வாக்கை செல்லுபடியற்றதாக மாற்றுவதாக இருக்கலாம். இவற்றில் மக்கள் எதை செய்வார்களென்பது ஜனாதிபதி வேட்பாளர்களின் முடிவுகளிலேயே தங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.“5 கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து வேட்பாளர்களின் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் நாங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு முயற்சிகள் சாதமாக இல்லாவிட்டால் தமிழ் மக்களின் முடிவுகள் தொடர்பாக மாற்றுத் தெரிவுகள் உள்ளன என மேலும் தெரிவித்தார் .(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *