Search
Tuesday 18 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ் சினிமா ஒரு மீள் கண்நோட்டம் 2017 கோடம்பாக்கத்தின் டாப் 5 புதுமுகங்கள்

தமிழ் சினிமா ஒரு மீள் கண்நோட்டம் 2017 கோடம்பாக்கத்தின் டாப் 5 புதுமுகங்கள்

தமிழ் சினிமாவின் வரலாற்றில் தங்கள் பெயரையும் எழுத வேண்டும் என்ற ஆவலோடு, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான நடிகர், நடிகைகள் கடுமையாக போராடி வருகிறார்கள். ஆனால் இதில் வெகு சிலருக்கே அந்த வாய்ப்பு கிடைக்கிறது. நேற்று புதுமுகமாக அறிமுகமானவர்கள் கூட, இன்று நாடு முழுவதும் அறிந்த பிரபலமாக மாறும் மேஜிக் கொண்டது தமிழ் சினிமா. 2017ம் ஆண்டு, தங்களின் அசத்தல் நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த புதிய டேலன்ட்களை, இந்த ரீவைண்ட் 2017 பதிவில் பார்க்கலாம்.

1fஷ்ரத்தா ஸ்ரீநாத் (விக்ரம் வேதா, இவன் தந்திரன், ரிச்சி) – கன்னடத்தில் யூடர்ன் என்ற தனது அறிமுக படத்திலேயே பல விருதுகளை பெற்று அசத்திய ஷ்ரத்தா ஸ்ரீநாத், இந்த ஆண்டு தமிழில் 3 படங்களில் நடித்துள்ளார். இதில் ஹைலைட் விக்ரம் வேதா. தனக்கு கொடுத்த ரோலை மிகக் கச்சிதமாக முடித்திருந்தார். ரொமான்டிக் சீனாக இருந்தாலும், இறுக்கமான சீனாக இருந்தாலும், அதில் முழு திறமையை காட்டி அசத்தினார் ஷ்ரத்தா. வித்தியாசமான ரோல்களுக்கு இவரை இயக்குனர்கள் நிச்சயம் அணுகுவார்கள் என்பதில் சந்தேகமில்லை…

09-1502263136-02-1501665683-tharamani3453-11-1502438107-12-1502524829

வசந்த் ரவி (தரமணி) – ராம் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த ஆண்டு வெளியாகி பல பாராட்டுக்களை பெற்ற படம் தரமணி. ஆண்ட்ரியாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும், புதுமுகம் வசந்த் ரவியின் பெர்பார்மென்ஸ், படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. நம் எல்லோருக்கும் பரிட்சயப்பட்ட ஒரு முகம். இந்த படத்தில் வரும் வசந்த் ரவி போன்ற ஒருவரை நாம் நிச்சயம் பார்த்திருப்போம். காதல், பொறாமை, வில்லத்தனம் என பல ஆ ஆங்கிள்களில் மிக யதார்த்தமாக நடித்திருந்தார்.

2_meesai_18006சுனு லக்ஷ்மி (அறம்) – நயன்தாராவின் ஸ்டார் பவரின் வெளிச்சத்தில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டானது அறம். எல்லோர் கவனமும் நயன் மீதிருந்தாலும், துணை நடிகர்கள் ரமேஷ் மற்றும் சுனு லக்ஷ்மியின் நடிப்பு நம்மை ஆச்சரியப்படுத்தியது. கேரளாவை சேர்ந்த சுனு லக்ஷ்மி, இதற்கு முன் பல சின்ன படங்களில் நடித்திருந்தாலும், தியேட்டர்களில் பெரிய அளவு ரிலீசான முதல் படம் அறம் தான். கிராமத்தை சேர்ந்த ஒரு ஏழை குடும்பத்தின் தலைவியாக, உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தி ஆடியன்ஸிடம் அப்லாஸ் வாங்கியிருந்தார். பெரிய படங்களில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சிக்ஸர் அடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

1514392907135அதிதி பாலன் (அருவி) – இந்த ஆண்டின் சர்ப்ரைஸ் ஹிட் படம் அருவி. இந்த படத்தை பற்றி தெரிந்தவர்களுக்கு இதன் வெற்றியின் மீது சந்தேகம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஹீரோயினை மையமாக கொண்ட கதை என்றபோதும், புதுமுகம் அதிதி பாலன் வெளுத்து வாங்கிவிட்டார். காட்சிகளில் உள்ள உக்கிரத்தை தனது அலட்டல் இல்லாத நடிப்பில் மிகவும் சிறப்பாக காட்டி 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இப்போ நடிகையாகியுள்ள இந்த முன்னாள் லாயர் தான், இந்த ஆண்டின் சிறந்த புதுமுகம்!

NTLRG_20170814120038581399


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *