Search
Saturday 22 September 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளை ஆரம்பம்

தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளை ஆரம்பம்

தமிழர் தாயக அரசியல் பரப்பில் ஆட்சி அதிகாரத்தில் யார் ஆதிக்கம் செலுத்தும் சக்தி என்பதற்கான முனைப்புக்கள் தீவிரம் பெற்றுவரும் இந்தச் சூழலில் ஓடுக்கப்பட்ட ஓர் தேசிய இனத்தின் அரசியல் பொருளாதார சமூக விடுதலையை நேசித்தவர் தியாக தீபம் திலீபன்.அதற்கு வலுச்சேர்த்து எம் இனத்தின் நியாயப்பாடான அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரம் கூட அருந்தாது உணவு ஒறுப்பில், நல்லூர் வீதியில் மூச்சடங்கிப்போனவர் தியாகி திலீபன்.தியாகி திலீபனின் நினைவு நாள்கள் நடைபெறும் இக் காலங்களில் களியாட்டங்களைத் தவிர்த்து திலீபனின் நினைவுகளை சுமந்து உணர்வு பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

இன்றுவரை திலீபனின் ஒரு கோரிக்கைகூட நிறைவேற்றப்படாத நிலையில் துன்பத்தின் நீட்சியில் தமிழினம் இடர்படும் இச்சூழலில் தியாகி திலீபனின் நினைவு நாள்கள் நடைபெறும் இக்காலங்களில் களியாட்டங் களைத் தவிர்த்து திலீபனின் நினைவுகளை சுமந்து உணர்வு பூர்வமாகக் கடைப்பிடிக்கவேண்டும் என தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளையும் வேண்டி நிற்கிறோம்.தியாகி திலீபன் எங்களோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரின் கனவு இன்னும் சுவாசித்துக்கொண்டுதான் இருக்கிறது என அதில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் 31 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் 15-09-2018 காலை 9.30 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நிலைவாலயத்தில் ஆரம்பமாகவுள்ளதாகவும் இந் நிகழ்வுகள் 25ம் திகதி வரை நடைபெறும் என்றும் இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.(15)1


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *