Search
Friday 19 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் தீர்மானத்திலிருந்து அரசாங்கம் பின்வாங்கல்?

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் தீர்மானத்திலிருந்து அரசாங்கம் பின்வாங்கல்?

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் தீர்மானத்திலிருந்து ஐக்கிய தேசிய கட்சி பின்வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் அந்த யோசனையை சமர்பித்து நிறைவேற்றுவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளால் அதனை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்திருந்தது.
இந்நிலையில் மீண்டும் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு அந்த யோசனையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்ட போதும் தொடரும் எதிர்ப்புகள் காரணமாக அந்த யோசனையிலிருந்து பின்வாங்கி அதனை மேலும் ஒத்தி வைப்பதற்கு ஆராயப்படுவதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *