Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் ரயிலை கவிழ்க்க முயற்சியா ? பொலிஸார் தீவிர விசாரணை

யாழில் ரயிலை கவிழ்க்க முயற்சியா ? பொலிஸார் தீவிர விசாரணை

மல்லாகத்திற்கும் கட்டுவானுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில் பாதையில் உள்ள வளைவொன்றில் தண்டவாளத் தையும் சிலிப்பர் கட்டைகளையும் இணைத்துப் பொருத்தப்பட்டிருக்கும் சுமார் இருபதற்கும் மேற்பட்ட இரும்பு கிளிப்பு களை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அகற்றியுள்ளனர்.தண்டவாளத்தையும் சிலிப்பர் கட்டைகளையும் இணைத்து பொருத்தப்பட்டிருந்த கிளிப்புகள் அகற்றப்பட்டமையால் ரயில் வரும் போது அவ்விடத்தில் புகையிரதம் தடம் புரளும் வாய்ப்புக்கள் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை அப்பகுதி குடிமனைகள் அதிகமாக உள்ள பகுதியும் ஆகும். அவ்விடத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டு இருந்தால் உயிரிழப்புக்கள் அதிகமாக ஏற்பட்டு இருக்கலாம்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாகப் ரயில் திணைக்களத்தினருக்கு தெரியப்படுத்தினர்.அதனை அடுத்து விரைந்து செயற்பட்ட ரயில் திணைக்கள அதிகாரிகள், கிளிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் வேறு கிளிப்புகள் பொருத்த நடவடிக்கை எடுத்து ரயில் பாதை சீர் செய்யப்பட்டது. அதனால் நடைபெறவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாகப் ரயில் திணைக்கள அதிகாரிகள் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *