Search
Tuesday 17 September 2019
  • :
  • :

ரிஷாத் , சாலி , ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 21 முறைப்பாடுகள்

ரிஷாத் , சாலி , ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 21 முறைப்பாடுகள்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதின் , முன்னாள் ஆளுநர்களான அசாத்சாலி மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 21 முறைப்பாடுகள் பொலிஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த முறைப்பாடுகளில் 11 முறைப்பாடுகள் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதினுக்கு எதிராகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அசாத்சாலிக்கு எதிராக 5 முறைப்பாடுகளும் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 2 முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் தொடர்பாக முறைப்பாடுகளை முன்வைக்கும் வகையில் கடந்த 4ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக இன்று வரை காலம் வழங்கப்பட்டிருந்தது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *