Search
Tuesday 18 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

3 கதாநாயகிகளுடன் பா.விஜய் நடித்து இயக்கிய ‘ஆருத்ரா’

3 கதாநாயகிகளுடன் பா.விஜய் நடித்து இயக்கிய ‘ஆருத்ரா’

‘ஸ்ட்ராபெர்ரி’ படத்தில் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்த கவிஞர் பா.விஜய் அடுத்து, ‘ஆருத்ரா’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து டைரக்டு செய்திருக்கிறார். படத்தை பற்றி அவர் கூறுகிறார்:–
‘‘ஆருத்ரா படத்தில் மும்பையை சேர்ந்த மாடல் அழகி தஷிதா, கொல்கத்தாவை சேர்ந்த மேகாலீ, ஐதராபாத்தை சேர்ந்த சோனி ஆகிய மூன்று பேரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். நான், தொன்மையான பொருட்களை சேகரிப்பவராக வருகிறேன். கே.பாக்யராஜ், மொட்டை ராஜேந்திரன் ஆகிய இருவரும் துப்பறியும் நிபுணர்களாக நடித்து இருக்கிறார்கள்.
இவர்களுடன் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஒய்.ஜி.மகேந்திரன், மயில்சாமி, பேராசிரியர் ஞானசம்பந்தம், மீரா கிருஷ்ணன், சஞ்சனாசிங் ஆகியோரும் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்து இருக்கிறார்.
‘ஆருத்ரா என்பது ஒரு கதாபாத்திரத்தின் பெயர். இந்த படத்தில், 3 கதாநாயகிகள் இருந்தாலும், காதல் காட்சிகள் என்று தனியாக எந்த காட்சிகளும் இல்லை. ‘ஸ்ட்ராபெர்ரி’ படத்தில் ஒரு கருத்தை சொன்னது போல், ‘ஆருத்ரா’ படத்திலும் ஒரு கருத்தை சொல்கிறேன்.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார்? என்று அனைத்து பெற்றோர்களும் தெரிந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கருத்தை படம் சித்தரிக்கிறது. சென்னை, புதுச்சேரி, ஜெய்ப்பூர், ஹரித்துவார், குலுமனாலி ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக் கிறது.’’(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *