செய்திகள்

Update: உயிரிழப்பு எண்ணிக்கை 607 ஆக உயர்வு- 214 பேரை காணவில்லை!

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை  607ஆக உயர்வடைந்துள்ளதுடன், காணாமல் போனோரின் எண்ணிக்கை 214ஆக காணப்பட்டது.

அதிகளவான மரணங்கள் மற்றும் காணாமல் போன சம்பவங்கள் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது. இந்த மாவட்டத்தில் 232 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 81 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 25 மாவட்டங்களிலும் 448,817 குடும்பங்களைச் சேர்ந்த 1,586,329 பேர் (சுமார் 15 இலட்சத்து 86 ஆயிரத்து 329 பேர்) பாதிக்கப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்காக நாடளாவிய ரீதியில் 1,385 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இம்முகாம்களில் 53,758 குடும்பங்களைச் சேர்ந்த 201,875 பேர் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சொத்து சேதங்களைப் பொறுத்தவரையில், 971 வீடுகள் முழுமையாகவும், 40,358 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.