WiFi பயன்படுத்தினால் மரணமா- அதிர்ச்சியை கிளப்பும் பாடகி
ஒரு காலத்தில் இன்டர்நெட் என்பது மிகவும் விசித்திரமான விஷயம். ஆனால் இப்போதெல்லாம் அது சாதாரண விஷயமாகிவிட்டது.
யாரைப் பார்த்தாலும் கையில் போனும், இன்டர்நெட்டுமாக சுற்றி வருகின்றனர். அதோடு இப்போது வயர்லஸ் இன்டர்நெட் பெரிதாக வருகிறது.
சமீபத்தில் லண்டனை சேர்ந்த ஆஸ்கார் வென்ற பிரபல பாடகி அடெல் பேட்டியில், நான் மேடையில் பாடும்பொழுது ஒரே நேரத்தில் 18,000க்கும் மேற்பட்ட போன் கேமராக்கள் என்னை படம் எடுக்கின்றன. இது நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் அதே சமயம் எப்பொழுதும் போனும் கையுமாக இருப்பது ஆபத்துதான். நீங்கள் வேண்டுமானால் காத்திருந்து பாருங்கள் ஒரு நாள் WIFI போன்ற வயர்லெஸ் விஷயங்கள் 25 வருடத்துக்குள் பலரையும் மரணத்துக்கு உள்ளாக்கும் என அடெல் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
N5




