செய்திகள்

ஃப்ரண்ட்லைன் இதழுக்கான தடையை நீக்கிய ரணில்

1987ஆம் ஆண்டு வெளியான விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் செவ்வியை மறுபிரசுரம் செய்திருந்த ஃப்ரண்ட்லைன் இதழை சுங்கப் பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர்.

இதனை விடுவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுங்கப்பிரிவினருக்கு கட்டளையிட்டுள்ளார்.