செய்திகள்

”அச்சுறுத்தல்கள் மூலம் எங்கள் செயற்பாடுகளை நிறுத்த முடியாது”: அபயாராம விகாராதிபதி

அச்சுறுத்தல்கள் மூலம் எங்களின் குரல்களை நசுக்க முடியாது என்று கொழும்பு நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையின் விகாராதிபதி முருந்தோட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக எவரேனும் அதிகாரத்தை பயன்படுத்த முயற்சிப்பார்களாக இருந்தால் அதற்கு எதிராக செயற்படுவதற்கு மகா சங்கத்தினர் பின்வாங்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை மாகாண சபை முறைக்கு தாம் எதிரானவர்கள் என்றும், இதன்படி மாகாண சபைகளுக்கு எதிரான போராட்டத்தை நாடுபூராகவும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். -(3)