செய்திகள்

அஜித்தின் பிறந்தநாளன்று வெளியாகிறது கமலின் உத்தமவில்லன்

கமலஹாசன், பூஜா குமார் நடித்துள்ள ‘உத்தம வில்லன்’ படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனையடுத்து படம் மே 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘உத்தம வில்லன்’ என்கிற படத்தைத் தயாரித்துள்ளார் கமல். ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவான இந்தப் படம் இன்று சென்சார் ஆனது. யு சான்றிதழ் வழங்கப்பட்டதை அடுத்து, ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, வருகிற மே 1-ம் தேதி உத்தம வில்லன் வெளியாகிறது.

நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாள் மே முதலாம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது.