செய்திகள்

அடுத்த தலைமுறையினருடன் பணியாற்றுவதை விரும்புகிறேன்: ராகுல் டிராவிட்

இந்திய ‘ஏ’ மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரபல வீரரான அவர் இதுகுறித்து கூறும்போது, அடுத்த தலைமுறையினருடன் பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இந்திய ‘ஏ’ மற்றும் 19 வயதுக்குட்பட்ட லெவல் மிகவும் முக்கியமானதாகும்.

இதில் பல்வேறு சவால்களும், நெருக்கடியும் உள்ளன. இந்த இரு அணியிலும் திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அவர்களை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வதே லட்சியமாகும். சீனியர் அணியின் வெற்றிடத்தை நிரப்புவேன் என்றார்.