செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா மரணங்களுக்கு உடனடி மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளாமையே காரணம் – சுகாதார மேம்பாட்டு பணியகம்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்களுக்கு காரணம் உடனடி மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளாமையே என சுகாதார மேம்பாட்டு பணிமனையின் பணிப்பாளர், விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவாந்துடாவ தெரிவித்துள்ளார்.இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதமானவர்கள் பாரதூரமான அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை என்றும் 20 சதவீதமானவர்களுக்கே அவ்வாறான நிலைமை ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் மோசமாக பாதிக்கப்படக்கூடியவர்களை அடையாளம் காண்பது அவசியம் இல்லாவிட்டால் அவர்களை குணப்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லாமல்போய்விடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக நோய் அறிகுறிகள் தென்படுவதாக எவராவது கருதினால் அவர்களை உடனடி மருத்துவ கிசிச்சையை பெற்றுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.(15)