செய்திகள்

அதிகாரமில்லாத நிலையிலும்மக்களுக்கான சேவை செய்கிறோம்: டக்ளஸ் தேவானந்தா

ஆட்சி அதிகாரமில்லாத நிலையிலும்கூட சமூகப்பொறுப்புணர்வுடனும் அக்கறையுடனும் மக்கள் மீதான நலன்களையும் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை வகுத்து அவற்றை செயற்படுத்த நாம் திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மானிப்பாய் வீதி ஆறுகால்மடம் அரசடி சிறி ஞானவைரவர் சுவாமி கோயிலுக்கு அண்மையில் அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கைக்கமைவாக இன்றையதினம் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களாகிய நீங்கள் விடுத்த கோரிக்கைக்கமைவாக நான் இங்கு வருகைதந்து உங்களது தேவைப்பாடுகள் தொடர்பில் அறியமுடிகின்றது.

குறிப்பாக அடிப்படைத் தேவைகளான வீட்டுத்திட்டம், குடிநீர், மலசலகூடம், நிரந்தரக்காணி, காணி உரிமம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வாழ்வாதார உதவிகள் வீதி புனரமைப்பு ஏனைய தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் பூரண விபரங்கள் அடங்கியதான விபரங்களை தமக்கு சமர்ப்பிக்குமாறும் செயலாளர் நாயகம் கேட்டுக்கொண்டார்.

1 3 4 5

இதனிடையே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்டறிவது மட்டுமன்றி அவற்றுக்கான தீர்வுகளை முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக்கொடுப்பதும் எமது நோக்காகும்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுங்கட்சியில் இருப்பவர்களால் தான் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும். இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எந்த வகையிலான தீர்வுகளை பெற்றுத்தந்துள்ளார்கள் என்று கேள்வியெழுப்பிய செயலாளர் நாயகம் அவர்கள், எதிர்காலங்களிலும் எமது மக்களுக்கான தீர்வுகளை ஒருபோதும் அவர்களால் பெற்றுத்தர முடியாதென்றும் தெரிவித்தார்.

இருந்த போதிலும் ஆட்சி அதிகாரமில்லாத நிலையிலும்கூட சமூகப்பொறுப்புணர்வுடனும் அக்கறையுடனும் மக்கள் மீதான நலன்களையும் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை வகுத்து அவற்றை செயற்படுத்த நாம் திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது ஈ.பி.டி.பியின் யாழ் நகர இணைப்பாளர் றீகன், அகஸ்ரின் மாஸ்டர் ஆகியோர் உடனிருந்தனர்.