செய்திகள்

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அனந்தி விஜயம்: கைதிகளின் குறைகளை ஆராய்ந்தார்

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று வியாழக்கிழமை காலை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்துள்ளார். அவர்கள் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் அவர் பேட்டறிந்துகொண்டார்.

புலம்பெயர் தமிழர் ஒருவரின் நிதியுதவியில் கொள்வனவு செய்யப்பட்ட ஆடைகள் சிலவற்றையும் அவர் இதன்போது தமிழ் அரசியல் கைதிகளுக்கு கையளித்தார்.

தமது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தங்கள் குடும்பங்களுக்கு உரிய உதவிகளை செய்துகொடுக்கும்படியும் அரசியல் கைதிகள் அனந்தியிடம் கேட்டுக்கொண்டனர்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் பெரும்பாலானவர்கள் பத்து வருடங்களாக விசாரணைகள் இன்றி வைக்கப்பட்டுள்ளவர்கள். தமது வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டிய தேவையையும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.