செய்திகள்

அனந்தி சசிதரன் இடை நிறுத்தப்பட்டதாக தமிழரசுக் கட்சி கடிதம்

 கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காக, கட்சியின் உறுப்பினரும், மத்திய குழு உறுப்பினருமாகிய திருமதி அனந்தி சசிதரனை, கட்சியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்திருக்கின்றது.

அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கத்தினால் அனந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது.

நடந்து முடிந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது என்ற தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு மாறாக செயற்பட்டதாலேயே அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுப் பத்திரம் விரைவில் அனுப்பிவைக்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ananthi sasitharan news