செய்திகள்

அனுமதிப் பத்திரம் இன்றி மரப்பலகைகளை கொண்டு சென்றவர் கைது (படங்கள்)

கண்டி பகுதியில் இருந்து தலவாக்கலை நகர பகுதியில் உள்ள மரப்பலகை கடைக்கு அனுமதி பத்திரம் இல்லாமல் டிப்பர் லொறியில் சபு என்ற மரப்பலகைகளை கொண்டு சென்ற ஒருவர் திம்புள்ள பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

29.04.2015 அன்று இரவு 8 மணியளவில் நாவலப்பிட்டி தலவாக்கலை பிரதான வீதியில் பத்தனை சந்தியில் வைத்து குறித்த டிப்பர் லொறியை திம்புள்ள பத்தனை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தும் போது அனுமதி பத்திரம் இல்லாமல் இரவு நேரத்தில் கொண்டு செல்லப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

மரப்பலகைகளை கண்டியிலிருந்து நாவலப்பிட்டி பத்தனை பிரதான வீதியினூடாக தலவாக்கலைக்கு கொண்டு செல்ல முற்ப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மரப்பலகைகளின் பெறுமதி பத்து இலட்சம் ரூபா என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து லொறியின் சாரதியை சந்தேகத்தின் பேரில் திம்புள்ள பத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்த சந்தேக நபரையும் லொறியையும் 30.04.2015 அன்று அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

DSC08637