செய்திகள்

அனுரகுமார கொழும்பு மாவட்டத்தில் களமிறங்க தீர்மானம்

ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.

கடந்த முறை  ஜனநாயக தேசிய முன்னணியின் தேசிய பட்டியல் எம்.பியாகவே அவர் பாராளுமன்றம் சென்றிருந்தார்.

இந்நிலையில் கட்சியின் தலைவராக இவர் பதவியேற்றப்பின்னர் கட்சி எதிர்க்கொள்ளும் முதலாவது பாராளுமன்ற தேர்தலாக இது அமைந்துள்ளது. இதன்படி இம்முறை கடந்த முறையைவிட அதிக உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் முயற்சியில் அனுரகுமார தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.