செய்திகள்

அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி முதல் மீள திறக்க தீர்மானம்

அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி முதல் மீள திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். விடுதிகளை ஆரம்பிக்கும் விடயத்தில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன. ஆகையினால் 3, 4 ஆம் வருட மாணவர்களை மட்டும் விடுதிக்குள் உள்வாங்குவதற்கு தீர்மானித்துள்ளோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுகின்றமையினால், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, பல்கலைக்கழகங்களை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.(15)