செய்திகள்

அப்துல் கலாம் நேற்று இரவு இலங்கை வந்தார்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தார்.

அவரை அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழுவினர் விமான நிலையத்திலிருந்து வரவேற்று அழைத்து வந்தனர்.

இன்று கொழும்பில் மின்சக்தி மற்றும்வலுச் சக்தி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள வலுச் சக்தி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அவர் இலங்கை வந்துள்ளார்.

இதேவேளை அந்த மாநாட்டுக்கு முன்னர் ஜனாதிபதி  ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கவுள்ளார்.