செய்திகள்

அமெரிக்கத் தூதுவராகிறார் மகிந்த சமரசிங்க: பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்!

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

எம்.பி பதவியில் இருந்து இராஜினாமா செய்வது தொடர்பாக அவர் சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளமையால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக மஹிந்த சமரசிங்க சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி எதிர்வரும் 29 ஆம் திகதி அவர் அமெரிக்காவுக்கு பயணமாகவுள்ளார்.
-(3)