செய்திகள்

அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்று இலங்கை வருகிறார்

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்று இலங்கை வரவுள்ளார்.
ஆசியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அவர் நேற்றைய தினம் இந்தியாவுக்கு வந்துள்ளதுடன் இன்றைய தினம் இலங்கைக்கு வரவுள்ளார்.
இன்றும் நாளையும் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனல்ட் டிரம் பதவிக்கும் காலத்தில் அமெரிக்காவின் உயர்மட்ட தலைவர் ஒருவர் இலங்கை வரும் முதல் சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.
இவரின் வருகைகையொட்டி கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. -(3)