செய்திகள்

அமெரிக்காவின் டலாஸ் நகர பொலிஸ்தலைமையகம் மீது துப்பாக்கிபிரயோகம்

அமெரிக்காவின் டலாஸ் நகரின் பொலிஸ் தலைமையகத்தின் மீது இனந்தெரியாத நபர் ஓருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பியோட முயன்ற வேளை சுடப்பட்டுள்ளமை மிகுந்த பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.
வான் ஓன்றில் பொலிஸ் வாகனத்தை இடித்துவிட்டு தப்பியோடிய குறிப்பிட்ட நபரை பொலிஸார் துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் அந்த நபர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ள அதிகாரிகள் எனினும் குறிப்பிட்ட வாகனத்தில் வெடிமருந்துகள் நிரப்பபட்டிருக்கலாம் என்பதால் பொலிஸார் இன்னமும் அதற்கு அருகில் செல்லவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
டலாஸ் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார் தாக்குதலிற்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
நான்கு பேர் கொண்ட சிறிய குழுவினரே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் ஆரம்பத்தில் தெரிவித்துள்ளனர்.எனினும் பின்னர் ஓரு நபரே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் அந்த நபர் தப்பியோட முயன்ற வேளை ஹட்சின்ஸ் என்ற இடத்தில் வைத்து சுடப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட நபர் வெள்ளை இனத்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.