செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை மிக மோசமாக உள்ளது: ஒபாமா கருத்து

வளர்ந்த நாடுகளான பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் ஜப்பானை விட அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை மிக மோசமாக உள்ளதாக அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

கடந்த 18-ந் தேதி அந்நாட்டின் தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியான நிலையில், இன்று மீண்டும் அங்குள்ள டெட்ராய்ட் நகரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவங்களை கருத்தில் கொண்டே  தனது @POTUS டுவிட்டரில் ஒபாமா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நேரத்தில் அனுதாபங்களை வெளியிடுவது மட்டும் போதுமானதல்ல. பெருகி வரும் துப்பாக்கி சூட்டிற்கு எதிராக நாம் ஏதாவது செய்தாக வேண்டிய தருணம் இது என்றும் ஒபாமா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்நாட்டில் வசிக்கும் 100 பேரில் 88 பேர் துப்பாக்கி வைத்துள்ளதாக தி கார்டியன் நாளிதழ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.