செய்திகள்

அமெரிக்காவில் ஹோட்டலில் இளைஞனுடன் தங்கியதாக வெளியான செய்திகளை மங்கள மறுப்பு

அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்தபோது அங்குள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் இளைஞன் ஒருவருடன் ஒன்றாக தங்கியிருந்ததாக வெளியான செய்திகளை வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர மறுத்திருக்கிறார்.

இளைஞன் ஒருவருடன் தங்கியிருந்ததாக வெளியான செய்தி குறித்து ‘கொழும்பு டெலிக்ராப்’ இணையத்தளம் விளக்கம் கேட்டதற்கு அளித்துள்ள பதிலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தன்னைப்பற்றி வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி ராஜபக்ஸவுடன் தோற்கடிக்கப்பட்ட தீய சக்திகள் மீண்டும் தமது அகோர முகங்களை தூக்குவதற்கு ஆரம்பித்திருக்கின்றன என்றும் சிறிசேன அரசாங்கத்தின் தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கெதிராக விஷம பிரசாரத்தை அவர்கள் ஆரம்பித்திருப்பதகவும் இதில் தானும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது அமெரிக்க விஜயத்தில் மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து தனது பதிலில் விபரித்துள்ள மங்கள சமரவீர இந்த விஜயத்தின் போது தான் தங்கியிருந்த ஹோட்டல்கள் தூதுவராலயத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்திருக்கும் சமரவீர, தன்னுடன் பயணம் செய்த நபர் தன்னுடன் நீண்ட காலமாக பணியாற்றிவரும் சமீர மணாஹர என்றும் அவர் தற்போது தனது அமைச்சில் பொது தொடர்பாடல் அதிகாரியாக பபணியாயற்றிவருகிறார் என்றும் அவர் திருமணமானவர் என்றும் அழகிய ஒரு குழந்தைக்கு தகப்பன் என்றும் கூறியிருக்கிறார்.