செய்திகள்

அமெரிக்கா, பிரித்தானியா வாக்களித்தபடி ஐ.நா. அறிக்கை வெளிவரும் என நம்புகின்றோம்: சம்பந்தன்

அமெரிக்காவும் பிரித்தானியாவும் வாக்குறுதியளித்தபடி ஐ.நா.விசாரணை அறிக்கை நிச்சயம் வெளி வரும், அந்த அறிக்கையானது உண்மைகளை வெளிக் கொண்டுவரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.

ஐ.நா.விசாரணை அறிக்கை குறித்தும் கருத்­துக்­கேட்ட போதே சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்;

மேற்­படி தீர்­மா­னத்தை நிறை­வேற்­றி­ய­வர்கள் வேறு யாரு­மில்லை. அந்த மாகா­ணத்தை சேர்ந்­த­வர்­களே. அவர்­க­ளுக்குத் தெரியும் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்­தத்தின் போது என்ன நடந்­தது என்று. இழப்­புக்கள் பற்­றியும் அழி­வுகள் சம்­பந்­த­மா­கவும் போதிய ஆத­ர­மின்­றியோ தர­வுகள் இல்­லா­மலோ அந்த பிரே­ர­ணையைக் கொண்டு வந்­தி­ருக்க முடி­யாது.

இதே­வேளை இலங்­கைக்­கெ­தி­ரான மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணை அறிக்கை வெளி­வ­ராது கால­தா­ம­த­மா­கலாம் என்ற விவ­காரம் என்ன முடிவைப் பெறு­கி­றதோ பொறுத்­தி­ருக்க வேண்டும். அமெ­ரிக்­காவும் ஐக்­கிய ராட்­சி­யமும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு அளித்த வாக்­கு­று­தியின் படி விசா­ரணை அறிக்கை நிச்­ச­ய­மாக வெளி­வரும். அந்த அறிக்கை நடந்த விட­யங்­க­ளையும் உண்­மை­யையும் வெளி­கொண்டு வரு­மென்று நம்­பலாம்.

வட­மா­காண சபையில் ஏக­ம­ன­தாக தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கி­றது. எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களும் சேர்ந்து அந்த தீர்­மா­னத்தை நிறை­வேற்­றி­யி­ருக்­கின்­றார்கள். நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை தமிழ் மக்கள் அனை­வரும் மதிக்க வேண்­டி­யது எமது கடமை. தமிழ் மக்கள் எதிர்­நோக்­கு­கின்ற நீண்ட கஷ்­டங்­களை துன்­பங்­களை ஒரு முடி­வுக்குக் கொண்டு வர­வேண்­டி­யது அவ­சியம். அந்த தீர்­மா­னத்தின் அடிப்­ப­டையில் நாட்டில் வாழு­கின்ற சிங்­கள தமிழ் முஸ்லிம் மக்கள் அனை­வ­ருக்கும் உண்மை சொல்­லப்­பட வேண்டும். நடந்­தது என்ன என்­பது வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

போர்க்­குற்­றங்கள் சம்­பந்­த­மாக உண்மை அறி­யப்­பட்டு ஐ.நா. சபையின் தீர்­மா­னத்தின் அடிப்­ப­டை­யிலும் மனித உரிமைப் பேர­வையின் கோரிக்­கைக்கு அமை­வா­கவும் சர்­வ­தேச விசா­ரணை நடை­பெற்­றி­ருக்­கி­றது. எனவே விசா­ர­ணையின் அடிப்­ப­டையில் உண்மை வெளிக் கொண்டு வரப்­பட வேண்டும். நடந்­தது என்ன என்­பதை நாட்டில் வாழும் மக்கள் அனை­வரும் அறிய வேண்டும். அறி­வது அவ­சியம். நாட்டில் வாழு­கின்ற இனங்­க­ளுக்­கி­டையில் உண்­மை­யான புரிந்­து­ணர்­வையும் சமத்­து­வ­மான சமா­தா­னத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­பட வைப்­ப­தாக இருந்தால் ஒழிவு மறைவின் மூல­மா­கவோ மூடி மறைப்­பதன் மூல­மா­கவோ அதைக் கொண்டு வர முடி­யாது.