செய்திகள்

அமெரிக்க அரசின் 4 மில்லியன் ஊழியர்களின் விவரங்கள் அடங்கிய கம்யூட்டர்களை ஹேக் செய்தது சீனாவா? விசாரணை தீவிரம்

அமெரிக்க அரசின் 4 மில்லியன் ஊழியர்களின் விவரங்கள் அடங்கிய கணணிகள் ஊருடுவப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களாக உள்ள 4 மில்லியன் பேரின் தனிப்பட்ட விவரங்களும் முன்னாள் ஊழியர்கள் பற்றிய தகவல்களும் முடக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனமோ அல்லது அரசோ இதன் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த வேலையை செய்தது சீனாவா என்று பலத்த சந்தேகம் எழுந்துள்ளதால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

யார் இந்த செயலை செய்தது என்பதை கண்டுபிடிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. புதிய மால்வேரால் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்கள் பாதிப்படைவதை அந்நாட்டு அலுவலகம் கடந்த ஏப்ரல் மாதம் கண்டுபிடித்தது. எனினும் எப்படிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களால் அணுகப்பட்டது என்பதை தெரிவிக்க விசாரணைக்குழு மறுத்து விட்டது.கடந்த ஆண்டும் அந்நாட்டு அலுவலக கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டபோதும் சீனா மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.