செய்திகள்

அமெரிக்க தூதரக பணிப்பாளருக்கும் மட்டு ஊடகவியலாளர்களுக்கும் இடையில் சந்திப்பு

ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அமெரிக்கா தயாராகவிருப்பதாக அமெரிக்க தூதுவராலயத்தின் ஊடக மற்றும் கல்வி பிரிவுக்கான பணிப்பாளர் திருமதி நிக்கோலி சூலீக் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் அமெரிக்க தூதுவராலயத்தின் ஊடகம் மற்றும் கல்விக்கான பணிப்பாளருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை ஈஸ்ட் லகூண் ஹோட்டலில நடைபெற்றது.

அமெரிக்க தூதுவராலயத்தின் ஊடக, கலாசார மற்றும் கல்வி அலுவல்கள் பணிப்பாளர் நிக்கோலி சூலீக் மற்றும் தூதுவராலயத்தின் தொடர்பாடல் உதவி இணைப்பாளர் ஒமர் இராஜரெட்ணம் ஆகியோர் ஊடகவியலாளர்களின் தேவைகள், பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்தனர்.

இதன்போது அச்சு, இலத்திரனியல், ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன் அமெரிக்க நாட்டு ஊடகவியலாளர்களுக்கும் கிழக்கு ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான உறவினை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்குமாறும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு பணிப்பாளர், அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டன.

IMG_0027 IMG_0044 IMG_0050 IMG_0052