செய்திகள்

அமெரிக்க படையினர் 100 பேரிற்கு ஐஎஸ் அமைப்பு மரண அச்சுறுத்தல்

அமெரிக்க படையினர் 100 பேரிற்கு ஐஎஸ் அமைப்பு விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கையை தொடர்ந்து அவர்களை எச்சரிக்கையாகயிருக்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பிட்ட அமைப்புடன் தொடர்புடைய இணையத்தளத்தில் அமெரிக்க படையினர் 100 பேரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளதுடன்,அவர்களை கொலைசெய்யுமாறு வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவ கணணிகளை ஊருடுவி உள்ளே நுழைந்து குறிப்பிட்ட 100 பேர் குறித்த விபரங்களை பெற்றதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இவர்கள் ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்,அவர்களுக்கு எதிராக தனது ஆதரவாளர்களை நடவடிக்கையெடுக்குமாறும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பிட்ட அச்சுறுத்தல் குறித்து ஆராய்ந்துவருவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட 100 பேர் குறித்த விபரங்கள் அமெரிக்க இராணுவவெப்தளங்களில் இலகுவாக பார்க்ககூடிய விதத்தில் இடம்பெற்றுள்ளன, இதற்காக கணணிகளை ஊடுவ வேண்டிய அவசியமில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை குறிப்பிட்ட பட்டியலில் உள்ளவர்களை தனிப்பட்ட ரீதியில் பென்டகன் அதிகாரிகள் தொடர்புகொண்டு எச்சரித்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.