செய்திகள்

அமெரிக்க பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் பலி!

அமெரிக்காவில் மிச்சிக்கன் மாநிலத்திலுள்ள உயர்தரப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

15 வயதான மாணவன் ஒருவனே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
சந்தேகநபர் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி 15 தொடக்கம் 20 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டு ஐந்து நிமிடங்களின் பின்னர் அவர் சரணடைந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஆசிரியர் ஒருவர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-(3)