செய்திகள்

அமெரிக்க விமானப்படை வீரர் கொழும்பு விடுதியில் சடலமாக மீட்பு

கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில், அமெரிக்க விமானப்படை விமானி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விமானப்படையில் பணியாற்றும் விமானி ஒருவர் கடந்த வியாழக்கிழமை இரவு கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அதற்கு முதல் நாளே அவர், அந்த ஐந்து நட்சத்திர விடுதியில் அறையொன்றை வாடகைக்குப் பெற்றிருந்தார்.

பல அழைப்புகளுக்கு விமானியிடம் இருந்து பதில் கிடைக்காத நிலையில், விடுதிப் பணியாளர்கள் சந்தேகமடைந்து, காவல்துறைக்கு தகவல் கொடுத்திருந்தனர். இதையடுத்து விமானியின் சடலம் மீட்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரேத பரிசோதனையின் பின்னரே, மேலதிக தகவல்கள் வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.