செய்திகள்

அமைச்சரவை அங்கிகரித்த தேர்தல் திருத்தத்தில் திருத்தங்கள் வரலாம் : ஜ.ம.சு.கூ இன்று தீர்மானிக்கும்

20வது அரசியிலமைப்பு திருத்தம் அமைச்சாவையில் நிறைவேற்றப்பட்டுள்ள போதும் அதில் காணப்படும் எம்.பிக்களின் எண்ணிக்கை  தொடர்பாக கட்சிக்குள் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் சிக்கல் நிலைமையேற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக நேற்று இரவு பிரதமரால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையில் எம்.பிக்களின் எண்ணிக்கை 225 ஆக காணப்படுவதுடன் அதில் 125 உறுப்பினர்கள் தொகுதி ரீதியிலும் 75 உறுப்பினர்கள் விகிதாசார ரீதியிலும் 25 பேர் தேசிய பட்டியல் ரீதியிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
ஆனால் எம்.பிக்களின் எண்ணிக்கை 225ற்கும் 255 ற்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக உள்ளது. இந்நிலையில் அமைச்சரவையில் 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள போதும் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானமெடுக்கப்படவுள்ளது.