செய்திகள்

அமைச்சர்களின் வாகனங்களை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டுமாம்

தற்போதைய காபந்து அரசாங்கத்தில் அரச வாகனங்களை வைத்திருக்கும் அமைச்சர்கள் யாரேனும் அந்த வாகனங்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவார்காகவிருந்தால் அதற்குறிய கட்டணங்களை அவர்கள் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சின் செயலாளர்களுக்கு அவர் அறிவுறுத்தல் கடிதத்தை அவர் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கமையவே ஜனாதிபதி இந்த உத்தரவை விடுத்துள்ளார்.
இதேவேளை அமைச்சர்களின் பாதுகாப்பு உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.