செய்திகள்

அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பு!

எரிபொருள் விலை அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியினரால் இன்று முற்பகல் அந்தப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த எம்.பிக்கள் பலர் இந்த பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் பிரேரணையை ஆதரிக்கவுள்ளதுடன், ஜே.வி.பி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி என்பன இது தொடர்பில் தமது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.
-(3)