செய்திகள்

அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக சந்திரிகா வழக்கு: அவதூறு செய்ததாக குற்றச்சாட்டு

ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்திருக்கின்றார்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தன்னைப்பற்றி அவதூறாகத் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவே இந்த வழக்கைத் தாக்கல் செய்வதற்கு தான் தீர்மானித்திருப்பதாகவும் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

கொழும்பில் தன்னுடைய இல்லத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாடியபோதே சந்திரிகா குமாரதுங்க இந்தத் தகவலை இன்று தெரிவித்தார்.