செய்திகள்

அமைதியாக வாக்களிப்பு ஆரம்பம்! யாழ்ப்பாணத்தில் காலையிலேயே உற்சாக வாக்களிப்பு

இலங்கையின் அடுத்த ஜனா­தி­ப­தியை தெரிவுசெய்யும் ஏழா­வது ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வாக்­க­ளிப்பு இன்று வியா­ழக்­கி­ழமை நாட­ளா­விய ரீதியில் காலை 7 மணி க்கு ஆரம்பமாகியுள்ளது. நாடு முழு­வதும் 12,316 வாக்­க­ளிப்பு நிலை­யங்­களில் இன்­றைய தினம் வாக்­க­ளிப்பு இடம்­பெ­றுகின்றது.

காலையில் கிடைத்த தகவல்களின்படி, வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெறுகின்றது. காலையில், வாக்களிப்பு மந்த கதியிலேயே இடம்பெறுவதாக அனைத்துப் பகுதிகளிலுமிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும் யாழ்ப்பாணத்தில் மக்கள் காலையிலேயே வரிசையில் நன்று வாக்களிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனா­தி­பதி தேர்­தலில் இம்முறை அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்­களின் சார்பில் 19 வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­டு­வ­துடன் பிர­தா­ன­மாக இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்கு இடையில் கடும் போட்டி நில­வு­கின்­றது.

ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவும் பொது எதி­ர­ணியின் சார்பில் பொது வேட்­பா­ள­ராக மைத­தி­ரி­பால சிறி­சே­னவும் போட்­டி­யி­டு­கின்ற நிலையில் இவர்கள் இரு­வ­ருக்கும் இடை­யி­லேயே கடு­மை­யான போட்டி காணப்­ப­டு­கின்­றது.

ஜனா­தி­பதி தேர்­தல்கள் வர­லாற்றில் முதற்­த­ட­வை­யாக இரண்டு தட­வைகள் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­வ­கித்த ஒருவர் மூன்­றா­வது தட­வை­யாக போட்­டி­யி­டு­கின்றார். கடந்த 2005 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆம் ஆண்­டு­களில் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இம்­முறை மூன்­றா­வது தட­வை­யா­கவும் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றார்.

ஜனா­தி­பதி தேர்தல் வாக்­க­ளிப்பில் தேர்­தலில் 1 கோடியே , 55 இலட்­சத்து 4ஆயி­ரத்து 490 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகு­தி­பெற்­றுள்­ளனர். அத்­துடன் நாட­ளா­விய ரீதியில் 22 தேர்தல் மாவட்­டங்­களில் 12316 வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. நாடு முழு­வதும் 1419 வாக்­கு­களை எண்ணும் நிலை­யங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இதற்­க­மைய தபால் மூல வாக்­குகள் 303 நிலை­யங்­க­ளிலும் சாதா­ரண வாக்­குகள் 1109 நிலை­யங்­களில் எண்­ணப்­படும்.

பிர­தான வாக்கு எண்ணும் நிலை­யங்கள் நாட்டின் 22 மாவட்­டங்­களில் அமைக்­கப்­பட்­டுள்­ளன. கொழும்பில் 1076 சாவ­டிகள் கம்­ப­ஹாவில் 1053 வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் நிறு­வப்­ப­ட­வுள்­ள­துடன் குறைந்­த­ள­வி­லான வாக்கு சாவ­டி­க­ளாக மன்னார் மாவட்­டத்தில் 76 கிளி­நொச்சி மாவட்­டத்தில் 96 என நிறு­வப்­ப­ட­வுள்­ளன.

ஒரு வாக்­கா­ளிப்பு நிலை­யத்­துக்கு ரீ 56 ரக துப்­பாக்கி ஏந்­திய 2 பொலிஸ் காண்ஸ்­ட­பிள்கள் அல்­லது சார்­ஜன்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­டுவர். அந்­த­வ­கையில் 12316 வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கும் 240000 க்கும் மேற்­பட்ட பொலிஸ் அதி­கா­ரிகள் பாது­காப்பு பணியில் ஈடு­பட்­டி­ருப்­பார்கள்.

தேர்­தலின் போது அவ­சர நிலமை ஒன்று ஏற்­படும் இடத்து அதனை சமா­ளிக்கும் வித­மாக 43 பொலிஸ் பிரி­வு­க­ளுக்கும் பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்கள், பொலிஸ் அத்­தி­யட்­சர்­களின் கீழ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரை உள்­ள­டக்­கிய படை­ய­ணி­யொன்றும் உரு­வாக்­கப்ப்ட்­டுள்­ள­தாக சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண குறிப்­பிட்டார்.

மாலை 4.00 மணிவரையில் வாக்களிப்பு இடம்பெறும். வாக்குகளை எண்ணும் பணி இரவு 7.00 மணியளவில் ஆரம்பமாகும். இரவு 10.00 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை வெளிவரத் தொடங்கும். நாளை நண்பகல் முழுமையான முடிவுகளும் வெளிவரும்.