செய்திகள்

அம்மாந்தோட்டையில் இன்னும் இரகசிய ஆயுதக் களஞ்சியங்கள்! பின்னணியில் எம்.பி.: சஜித்

அம்­பாந்­தோட்டை பெலி­யத்தை வீர­கெட்­டிய பிர­தே­சங்­களில் இன்றும் சட்­ட­வி­ரோ­த­மான ஆயுதக் களஞ்­சி­யங்கள் இயங்கி வரு­கின்­றன. இது தொடர்பில் உட­ன­டி­யாக விசா­ரணை செய்ய வேண்டும். இதன் பின்­ன­ணியில் எம்.பி ஒரு­வரே செயற்­ப­டு­கின்றார் என அமைச்சர் சஜித் பிரே­ம­தாச பாராளுமன்றத்தில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு பின்­ன­ரான வன்­மு­றைகள் தொடர்­பான விவா­தத்தில் உரை­யாற்றும் போதே வீட­மைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேம­தாச இவ்­வாறு தெரி­வித்தார். அமைச்சர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

நீலப்­ப­டை­யணி என இயங்­கி­யது இன்றும் இது இயங்­கு­கின்­றது. இது நீலப்­ப­டை­யணி அல்ல, நாய்­களின் படை­யணி. இந்த படை­ய­ணிகளால்தான் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அம்­பாந்­தோட்­டையில் வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன.

அன்று மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­திக்கு அம்­பாந்­தோட்­டையில் கூட்டம் ஒன்று நடத்த முடி­ய­வில்லை. அந்­த­ள­விற்கு நாய்­களின் படை­யணி துரித வன்­மு­றையை கட்­ட­விழ்த்து விட்­டி­ருந்­தது. இன்றும் அம்­பாந்­தோட்டை வீர­கெட்­டிய தங்­காலை பிர­தே­சங்­களில் சட்­ட­வி­ரோ­த­மான ஆயுதக் களஞ்­சி­யங்கள் இயங்கி வரு­கின்­றன.

இதன் பின்­ன­ணியில் இச்­ச­பையில் அங்கம் வகிக்கும் ஒரு பிர­தி­நிதி உள்ளார். இது தொடர்­பாக விசாரணைகள் நடத்­தப்­ப­ட­வேண்டும். இன்று மஹிந்த ராஜ­பக் ஷ தேசிய பட்­டி­யலில் பாரா­ளு­மன்­றத்­திற்கு வந்து எதிர்­க்கட்சி தலைவர் பத­வியை எடுத்­துக்­கொள்ள முயற்­சித்தார்.

அதனை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தடுத்து நிறுத்தி நிமால் சிறி­பால டி சில்­வா­வுக்கு எதிர்க்­கட்சித் தலை­வ­ராகும் வாய்ப்பை வழங்­கினார். அந்த நன்­றியை மறந்து இன்று தேர்­த­லுக்கு பின்­ன­ரான வன்­முறை தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் பிரே­ரணை கொண்டு வந்­துள்ளார்.