செய்திகள்

அயர்லாந்திடம் தோற்றது மேற்கிந்திய தீவுகள்

2015 உலககோப்iயின் முதலாவது அதிர்ச்சித் தோல்வியை இன்;று இரண்டு முறை உலககிண்ணத்தை வென்ற மேற்கிந்திய அணி சந்தித்துள்ளது.
அயர்லாந்திற்கு எதிராக நெல்சனில் இன்று நடைபெற்ற போட்டியில் 4 விக்கெட்களால் அணி தோல்வியை தழுவியுள்ளது.
இன்று நடைபெற்ற போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. அயர்லாந்தின் துல்லியமான பந்து வீச்சால் மேற்கிந்திய அணியின் விக்கெட்கள் ஆரம்பத்திலேயே சரிந்தன.
மேற்கிந்திய அணி ஓரு தருணத்தில் ஐந்து விக்கெட்களை இழந்து 87ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாற்றமான நிலையில் காணப்பட்டது, எனினும் ஆறாவது விக்கெட்டிற்காக ஜோடி சேர்ந்த், சிம்மன்சும் சமியும் அற்புமாக ஆடி அணியை மிகவும் வலுவான நிலைக்கு இட்டுச்சென்றனர். இவர்கள் இருவரும் ஆறாவது விக்கெட்டிற்காக 143 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது .
சிம்மன்ஸ் 84 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகள் அடங்கலாக 102 ஓட்டங்களை பெற்றார், சமி 4 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகளுடன் 67 பந்துகளில் 89 ஓட்டங்களை பெற்றார்.
மேற்கிந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்களை இழந்து 304 ஓட்டங்களை பெற்றது. அயர்லாந்து அணி சார்பில் சொரென்சன் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 45.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து தனது வெற்றியிலக்கை பெற்றது.அயர்லாந்து அணி சார்பில் பிஆர் ஸ்டேர்லிங் 92 ஓட்டங்களையும்,ஜொய்ஸ் 84, ஓ பிரையன் 79 ஓட்டங்களையும் பெற்றனர்.