செய்திகள்

அய்யர் அகர்வால் அபார ஆட்டத்தால் டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல். 2015.இன் இன்றைய போட்டியில் டெல்லி- பஞ்சாப் அணிகள் மோதின. டெல்லியில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற டெல்லி அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி வீரர்கள் டெல்லி வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். இதனால் பஞ்சாப் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ஓட்டங்களை மாத்திரம்பெற முடிந்தது. . டெல்லி அணி தரப்பில் ஜாகீர்கான் இரண்டு விக்கெட்டும் கவுல்டர் நைல் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்.

பின்னர் 119 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் டெல்லி அணியின் மயங் அகர்வால் ஸ்ரேயாஸ் அய்யர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் பஞ்சாப் அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடி ஓட்டங்களை சேர்த்தார்கள்.

இதனால் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்தது. அய்யர் 54 ரன்கள் எடுத்த நிலையில் அக்சார் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து திவாரி களம் இறங்கினார். மறுமுனையில் அகர்வாலும் அரை சதம் அடித்தார். இருவரின் அரை சதத்தால் டெல்லி அணி 13.5 ஓவரில் 119 ஓட்டங்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..